| மொபட்டை உடைத்த வாலிபருக்கு காப்பு Dinamalar
மொபட்டை உடைத்த வாலிபருக்கு காப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
08:14

மல்லூர்: மல்லூர், வெற்றிநகரை சேர்ந்த செல்வி, 56, சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில், உதவியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தன்னுடைய மொபட்டை, வெற்றிநகர் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்திய செல்வி, தங்கை வீட்டுக்கு சென்றார். அதே பகுதியை சேர்ந்த பூபாலன், 26, குடிபோதையில் மாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மொபட்டை அடித்து, உடைத்து சேதப்படுத்தினார். செல்வி கொடுத்த புகார்படி, மல்லூர் போலீசார், நேற்று பூபாலனை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X