பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல் | சேலம் செய்திகள் | Dinamalar
பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
08:14

சேலம்: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்த பெண்ணின் உறவினர்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்காடு, கோவில்மேட்டை சேர்ந்த செல்வகுமார் மனைவி கரிஷ்மா, 23. இவர்களுக்கு நான்காண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு வயதில் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் நெஞ்சுவலி எனக்கூறி, ஏற்காடு அரசு மருத்துவமனையில் கரிஷ்மா அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். ஏற்காடு போலீசார் வழக்குபதிவு செய்து, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை, கரிஷ்மாவின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன் உள்ள சாலையில், மறியலில் ஈடுபட்டனர். கரிஷ்மாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். சமாதானப்படுத்திய போலீசார், அவர்களின் பிரதிநிதிகளை, கலெக்டரிடம் புகார் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், கரிஷ்மாவிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக, அவரது கணவர் செல்வகுமாரை ஏற்காடு போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X