ஆங்கில கலப்பின்றி தமிழை பயன்படுத்த சுற்றறிக்கை: சிகாகோ உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
08:40

ஈரோடு: ''உலகின் பல பகுதியில் வாழும் தமிழர்கள், ஆங்கில கலப்பின்றி தமிழை பயன்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள, அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப, சிகாகோவில் நடந்த உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, த.மா.கா., பொதுச் செயலாளர் விடியல் சேகர் கூறினார்.


சிகாகோவில் கடந்த, 4 முதல், 7 வரை, உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது. இதில், தமிழக அரசு சார்பில் கலை பண்பாட்டுத்துறை மாபா பாண்டியராஜன் தலைமையில், த.மா.கா., பொதுச் செயலாளர் விடியல் சேகர் உட்பட, 20 பேர் பங்கேற்றனர்.


நேற்று, ஈரோடு திரும்பிய விடியல் சேகர் கூறியதாவது: உலக அளவில், 6,600 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 132 ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்கப்பட்டது. உலக அளவில் பிரபலமான பல்கலைக் கழகங்களில், தமிழ் இருக்கை ஏற்படுத்துவது. தமிழ் மொழியின் தொல்லியல், தமிழ் வளர்ச்சித்துறை, கலை பண்பாட்டுத்துறை ஆகியவற்றின் இணைய தளங்களை, உலக மொழிகளில் கொண்டு வருவது. கீழடி, கொடுமணல் போன்ற குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. வரும் நாட்களில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், கன்னியாகுமரி போன்ற கடல் பகுதிகள், தேனி உள்ளிட்ட மலைப்பகுதியிலும் ஆராய்ச்சி மேற்கொள்வது. திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளிட்டவைகளை, உலகின் பிற மொழிகளில் கொண்டு வருவது. உலகில் பல பகுதிகளிலும் தமிழ் படிக்க விரும்புவோருக்கு, அரசு சார்பில் புத்தகங்கள் தயார் செய்து, தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சடிக்கப்பட்டு அவர்கள் தமிழ் படிக்கவும், தமிழ் வளர்க்கவும் உதவுவது. அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்கள், ஆங்கில கலப்பு இன்றி, தமிழை பயன்படுத்தும் வகையில், தேவையான உபகரணங்களுடன் சுற்றறிக்கை அனுப்புவது உட்பட பல்வேறு முடிவுகள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X