| சிப்காட்டில் அமையும் ஆலைகளுக்கு மக்கள் எதிர்ப்பு Dinamalar
சிப்காட்டில் அமையும் ஆலைகளுக்கு மக்கள் எதிர்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
08:40

ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில், பொறியியல் தொழிலுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தில், விதியை தளர்த்தி, உணவு பூங்காவுக்காக, 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இங்கு தனியார் குளிர் பதன கம்பெனி, 10.61 ஏக்கரிலும், தனியார் மசாலா நிறுவனம், 23.91 ஏக்கரிலும், மற்றொரு தனியார் நிறுவனம், 4.18 ஏக்கரில் அமைய உள்ளது. இந்நிறுவனங்களுக்கு தினமும், 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், புதிய நிறுவனங்களால் மேலும் நிலை மோசமாகும் என, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அச்சங்கத்தினர், ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் ஏற்கனவே, மனு வழங்கினர். அம்மனுவில், மக்களை பாதிக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுதொடர்பாக, கலெக்டர் கதிரவன் தலைமையில், இச்சங்கத்தினர், அதிகாரிகள் மற்றும் தனியார் ஆலை நிர்வாகத்தினர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் நேற்று நடந்தது.


இக்கூட்டத்தில் பங்கேற்ற, நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி கூறியதாவது: மக்களை பாதிக்கும் தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது. இதை கண்டு கொள்ளாமல், குளிர்பான ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மசாலா நிறுவனம், குளிர்பதன கிடங்கு அமைப்பதில் ஆட்சேபனை இல்லை. சிப்காட்டில் தேங்கியுள்ள அபாயகரமான திடக்கழிவை அகற்ற வேண்டும். வரப்பாளையம் பஞ்சாயத்து, ஓடைக்காட்டூரில், 13 ஏக்கர் குளத்தை தூர்வாரி, தூய்மைப்படுத்த வேண்டும். சிப்காட் வளாகத்தில், 66 'சிசிடிவி' கேமரா அமைக்க வேண்டும். சிப்காட் தொழிற்சாலையை கண்காணிக்க, கலெக்டர் தலைமையிலான குழு அமைத்து, அதில் எங்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். சிப்காட் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அப்பகுதியில் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆலைகள் தரப்பிலும், கோரிக்கைகள் வழங்கப்பட்டது. இக்கோரிக்கைகளை பரிசீலித்து, பதில் வழங்குவதாக கலெக்டர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X