| அரசு சார்பில் பொல்லான் நினைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு Dinamalar
அரசு சார்பில் பொல்லான் நினைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
08:40

ஈரோடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு சார்பில் பொல்லான் நினைவு நாள் நிகழ்ச்சி, மொடக்குறிச்சியில் வரும், 17ல் நடக்கவுள்ளது. இது குறித்து, ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்ன மலைக்கு மெய் காவலராக இருந்து, ஆங்கிலேயர்களை எதிர்க்க துணையாக இருந்த பொல்லானை நினைவு கூறும் வகையில், அவரது நினைவு நாள் நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. சென்னை உயர்நீதி மன்றத்தில், இக்கோரிக்கை குறித்த வழக்கில், 'அரசு அலுவலக வளாகத்தில், பொல்லான் புகைப்படத்தை வைத்து, பொதுமக்கள் மாலை அணிவித்து, அஞ்சலி தெரிவிக்கும் வகையில், அவரது புகைப்படத்தை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என, உத்தரவிட்டது. இதன்படி வரும், 17 காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில், அரசு சார்பில் பொல்லான் படத்துக்கு மாலை அணிவித்து, நினைவு நாள் அனுசரிக்கப்படும். அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X