| ஈரோடு மகளிர் போலீசில் ஒரே நாளில் 4 காதல் திருமண ஜோடிகள் தஞ்சம் Dinamalar
ஈரோடு மகளிர் போலீசில் ஒரே நாளில் 4 காதல் திருமண ஜோடிகள் தஞ்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
08:40

ஈரோடு: ஆனி மாத கடைசி முகூர்த்தம் என்பதால், ஒரே நாளில் நேற்று ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நான்கு காதல் திருமண ஜோடிகள் தஞ்சமடைந்தன.


ஈரோடு, பெரிய சேமூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரவி மகன் பிரவீன் குமார், 24. மினி டோர் ஆட்டோ டிரைவர். இவருக்கும், ஈரோடு கொளாநல்லி பெரிய செம்மாண்டம் பாளையம் மாரிமுத்து மகள் மோகனா, 22, காதலித்து வந்தனர். இருவரும் உறவினர்கள். பெண்ணின் பெற்றோர் எதிர்த்ததால், வீட்டை விட்டு வெளியேறி காசிபாளையம் மலை கோவிலில் திருமணம் செய்தனர்.


* சிவகிரி, கந்தசாமிபாளையம் சடையபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் கோபி, 24. பொக்லைன் ஆப்பரேட்டர். இவருக்கும், மேச்சேரி பாரகல்லூர் சேட் மகள் சங்கீதாவுக்கும், 19, ஓராண்டாக காதல். இருவரும் உறவினர்கள். பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளிபாளையம் பேப்பர் மில் விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.


* சென்னிமலை, பெரியார் நகர் பி.ஆர்.எஸ். ரோடு சுப்பிரமணியம் மகன் கார்த்திகேயன், 27. இவருக்கும், ஈரோடு சென்னிமலை நத்தகாட்டு தோட்டம் தங்கவேலு மகள் சினேகாவுக்கும், 21. இரண்டு ஆண்டாக காதல். பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவை மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.


* ஈரோடு, பூந்துறை தெற்கு தோட்டத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சிவக்குமார், 22. இவருக்கும், ஈரோடு ஊத்துக்குளி சாவடிபாளையம் புதூரை சேர்ந்த தேவராஜ் மகள் ஜீவிதாவும், 22, காதலித்து வந்தனர். வீட்டை விட்டு வெளியேறி, கொடுமுடி விநாயகர் கோவிலில் நேற்று திருமணம் செய்தனர். நான்கு காதல் திருமண ஜோடிகளும், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். நால்வரையும் விசாரணைக்கு பின், தம்பதியினராக போலீசார் அனுப்பி வைத்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X