| ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி Dinamalar
ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
08:41

ஈரோடு: பட்டப்பகலில் மதுபோதையில், ஏ.டி.எம்., இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்த, கர்நாடகா மாநில வாலிபரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


ஈரோடு ஈ.வி.என். சாலை ஸ்டோனி பிரிட்ஜ் அருகே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு இரண்டு ஏ.டி.எம்., இயந்திரங்கள் உள்ளன. நேற்று மதியம், 12:30 மணியளவில் ஏ.டி.எம்., மையத்துக்குள் சென்ற, 27 வயது வாலிபர் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்து கொண்டிருந்தார். பணம் எடுக்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அந்த வாலிபரை பிடித்தனர். அவர், போதையில் இருந்தது தெரிய வந்தது. சூரம்பட்டி போலீசார், வாலிபரை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று முறைப்படி விசாரித்தனர். அதில், பிடிபட்ட வாலிபர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் விபரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. இது குறித்து, வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வங்கி கணக்கு, ஏ.டி.எம்., பண பரிவர்த்தனையை சரிபார்த்து வருகின்றனர். தற்போது ஏ.டி.எம்., மையம் மூடப்பட்டுள்ளது.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X