அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
09:48

பராமரிப்பில்லாத பொது கழிப்பறை: கரூர் வடக்கு ஆண்டாங்கோவில் பகுதியில், பொதுமக்கள் வசதிக்காக, பல ஆண்டுகளுக்கு முன், பொது சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டது. சரியான பராமரிப்பில்லாததால், தற்போது அந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு சீர்கேடு அடைந்துள்ளது. அப்பகுதி பொதுமக்கள், கழிப்பிடம் உள்ள வேறு பகுதிகளை தேடிக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது. சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்க வேண்டும். முறையாக பராமரிக்க வேண்டும்.


தாழ்வாக உள்ள சுவிட்ச் பெட்டி: கரூர் ஆண்டாங்கோவில் புதூர், பெரியார் நகரில் உள்ள மின்கம்பம் ஒன்றில், தாழ்வான நிலையில் சுவிட்ச் பெட்டி உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ள, மின்னோட்டம் உள்ள இப்பெட்டி, பூட்டு இல்லாமல் இருப்பதால், சிறுவர்கள் தொட்டுவிட வாய்ப்புள்ளது. மழைகாலங்களில், பெட்டியில் தண்ணீர் சென்று மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. பாதுகாப்பு கருதி, சுவிட்ச் பெட்டியை உயரமான இடத்தில் வைத்து பூட்டி வைக்க வேண்டும்.


குண்டும், குழியமான சாலையால் அவதி: கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு சாலை, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக் காலங்களில், சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். வாகனங்களில் செல்பவர்கள், சர்கஸ் சாகசம் செய்து சாலையில் செல்ல வேண்டி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில், இவ்வழியாக செல்பவர்கள், பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.


மின் கம்பம் சேதம்; விபத்து அபாயம்: கரூர் ஆண்டாங்கோவில் விஸ்வநாதபுரி பிரிவு சாலை, அக்ரஹாரத்தில் மின் கம்பம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தில், கான்கிரீட் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் பலவீனமாக உள்ளதால், கம்பம் எப்போது உடைந்து விழுமோ என, அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதனால், அவ்வழியாக செல்லவே மக்கள் தயங்குகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், கம்பம் சாய்ந்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.


தூர்வாரப்பாடாத ராஜவாய்க்கால்: கரூர் ஆண்டாங்கோவில் வழியாக செல்லும் பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், வாய்க்காலில் பல இடங்களில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கால்வாயில் ஏராளமாக வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால், தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழை நீரோடு, கழிவு நீர் சேர்ந்து செல்கிறது. இதனால், அப்பகுதியில் தூர்நாற்றம் மற்றும் சுகாதார கேடு ஏற்படுகிறது. ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X