'கரூரில் 290 லட்சம் லிட்டர் குடிநீர் தினசரி வினியோகம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
09:49

கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தினமும், 290 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


கரூர் அருகே, ரெங்கநாயகிபுரம், பசுபதி லேஅவுட், தாந்தோணி குடியிருப்பு, பசுபதிபாளையம் அருணாச்சல நகர் உள்ளிட்ட பகுதிகளில், புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணியை, போக்கு வரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.


அப்போது அவர் கூறியதாவது: ஜெர்மனி பன்னாட்டு நிதி நிறுவனம் மூலம், கரூர் பகுதியில், 24.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் தற்போது முடிவுற்று தினமும், 110 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தாந்தோணி பகுதியில், 25.16 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிந்து, தினசரி, 100 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இனாம் கரூர் பகுதியில், 18.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், 60 சதவீதம் அளவில் முடிக்கப்பட்டுள்ளன. மீதி பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இதுதவிர, கரூர் நகராட்சிப் பகுதிகளில் மொத்தமுள்ள, 636 ஆழ்துளை கிணறுகளில், 59 கிணறுகள் நீரின்றி உள்ளன. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், அந்த கிணறுகளை ஆழப்படுத்தி, குடிநீர் வினியோகம் செய்யும் பணி துவக்கி வைக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஒருவருக்கு தினமும், 120 முதல், 125 லிட்டர் என மொத்தம், 290 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மொத்தம், 45 ஆயிரத்து, 928 குடியிருப்புகளுக்கு புதிதாக குழாய் அமைத்து மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், டி.ஆர்..ஓ., சூர்யபிரகாஷ், ஆர்.டி.ஓ., சந்தியா, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X