மரவள்ளி கிழங்கு அறுவடை துவக்கம்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
10:02

சேலம்: மரவள்ளி அறுவடை துவங்கியுள்ள நிலையில், விலை அதிகரித்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சேலம், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம், ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் மரவள்ளி விளைவிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸ்டார்ச், ஜவ்வரிசி தயாரிக்கப்பட்டு, வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கடந்தாண்டு ஜவ்வரிசி, ஸ்டார்ச்சின் விலை எதிர்பார்த்தளவு இல்லாததால், மரவள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி முதல், சேலம், சேகோ - சர்வில் ஆன்லைன் பில்லிங் முறை அமல்படுத்தப்பட்டதால், ஸ்டார்ச், ஜவ்வரிசி விலை இரண்டு மடங்காக உயர்ந்தது. கடந்த மே மாதம் அளவுக்கு அதிகமாக ஜவ்வரிசி, ஸ்டார்ச் இருப்பு வைக்கப்பட்டதால், கிழங்கு மாவு மில்களில் உற்பத்தியை நிறுத்த, சேகோ சர்வ் நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. தற்போது, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, சேலம் மாவட்டம் கருமந்துறை, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மரவள்ளி அறுவடை துவங்கியுள்ள நிலையில், கிழங்கு மாவு மில்கள், வாரத்தில், மூன்று நாள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் மில்கள் இயங்கத் துவங்கியுள்ளன. அதே நேரத்தில், கடந்தாண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் மரவள்ளி விலை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு, இதே கால கட்டத்தில், ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ), 3,200 ரூபாய், ஸ்டார்ச், 1,600 ரூபாய்க்கு விற்ற நிலையில், மரவள்ளி டன், 5,000 ரூபாய்க்கு விற்றது. நடப்பாண்டில், நேற்றைய நிலவரப்படி, ஜவ்வரிசி, 6,235 ரூபாய், ஸ்டார்ச், 3,235 ரூபாய்க்கு விற்பதால், மரவள்ளி விலை, தரத்தை பொறுத்து, 8,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X