மத்திய சிறை ஊழியர்கள் ரவுடிகளுடன் கைகோர்ப்பு: உளவு அமைப்புக்கள் அறிக்கை அளித்தும் நடவடிக்கை அம்போ
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
10:03

சேலம்: சேலம் மத்திய சிறை ஊழியர்கள், ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் கை கோர்த்து, குற்றவாளிகளாகவே மாறும் அவலம் உருவாகியுள்ளது. இது குறித்து, உளவு அமைப்புக்கள் அறிக்கை அளித்த போதிலும், நடவடிக்கையில்லை என அதிகாரிகள் புலம்புகின்றனர்.


சேலம் மத்திய சிறையில், 682 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான்பராக், ஹான்ஸ், மொபைல் போன், அவற்றின் உதிரிபாகங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. சிறையில் சாதாரண காவலர்கள் முதல், உயரதிகாரிகள் வரை, கவனிக்கப்படுவதால், அவர்களின் துணையுடன் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. ஆடம்பர வாழ்வுக்கு ஆசை பட்டு, சிறை ஊழியர்களே குற்றவாளிகளாக மாறும் அவலமும் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ரவுடிகளுடன் கை கோர்த்து செயல்பட்டதாக சிறை வார்டன் தண்டபாணி, மார்ச் மாதத்தில் கணேசன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் மீது, சிறையில் உள்ள ரவுடிகளுக்கு, குற்றச் செயல்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்தக குற்றத்துக்காக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகாரம் பைனான்சில், 43 லட்சம் ரூபாய் கொள்ளை போன வழக்கில் ஈடுபட்டதாக சிறை வார்டன் பெருமாள்,43. கைது செய்யப்பட்டார். அதற்கு பின்னர், சேலம் மாநகரில், குற்றவாளிகள், ரவுடிகளுடன் கை கோர்த்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சிறை காவலர் மாதேஸ்,29. கடந்த வாரம், ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


சேலம் மத்திய சிறை ஊழியர்கள், குற்றவாளிகளாக மாறி வரும் நிலையில், இது குறித்து சிறைத்துறை விஜிலென்ஸ், உளவுத்துறை, மாநகர நுண்ணறிவு, க்யூபிரிவு, மத்திய அரசின் நுண்ணறிவு பிரிவு ஆகியவை, தனித்தனியாக போலீஸ், சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு அறிக்கை வயங்கிய போதிலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், சேலம் சிறையில் இருந்தபடி, ரவுடிகள் வெளியில் உள்ள ஆட்கள் மூலம், கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வருவதால், போலீசாரும் குற்றச்செயல்களை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X