எஸ்.இ.டி.சி., புதிய பஸ்கள் வெளி மாநிலங்களுக்கு இயக்கம்: தமிழகத்தில் நகரங்களுக்கு இடையே ஓடும் பாடாவதி பஸ்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
10:03

அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் (எஸ்.இ,டி.சி.,), புதிய பஸ்களை, வெளி மாநிலங்களுக்கு இயக்குவதற்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பதால், தமிழக நகரங்களுக்கு இடையே, பழைய பாடாவதி பஸ்களை இயக்கி, பயணிகளின் உயிருடன் விளையாடுகின்றனர்.


அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்தின், 25 கிளைகள் மூலம், 1,220 பஸ்கள் பராமரிக்கப்பட்டு, 1,020 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதில், கடந்த, 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பெற்ற நிலையில், விரைவுப்போக்குவரத்துக்கழகத்தின், 75 சதவீத பஸ்கள் இயக்க முடியாத நிலையில், இயக்கப்பட்டு வந்தன. அதை அடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, விரைவுப்போக்குவரத்துக்கழகத்தை சீரமைக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டார். அதன் படி புதிய பஸ்கள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த, எட்டு ஆண்டுகளில், இது வரை, விரைவுப் போக்குவரத்துக்கழகத்துக்கு, 600 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும், சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், அங்கிருந்து, பெங்களூரு, ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய வழித்தடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. அந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட பாடாவதி பஸ்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது.


கடந்த வாரம் விரைவுப்போக்குவரத்துக்கழகத்தால் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்ட, 150 புதிய பஸ்களும், வெளி மாநிலங்களுக்கே இயக்கப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து, தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களுக்கு புதிய பஸ்கள் இயக்கத்தை முற்றிலும் தடை செய்து அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். தென் மாவட்டங்களில் இருந்து ஊட்டி, நாகப்பட்டினம், வேலூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கும், வெளி மாநிலங்களில் இயக்கப்பட்ட பாடாவதி நிலையான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள், மாதத்தில் பல நாள் பழுதாகி பாதி வழிகளிலேயே நின்று விடுகின்றன. சேலம் - நெல்லை, நாகர்கோவில் - வேலூர் வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் ஓட தகுதி இல்லாத நிலையில், குறிப்பாக டிரைவருக்கான ஸ்டீரிங் மட்டுமே உள்ள நிலையில், வேகத்தை காட்டும் மீட்டர், ஏர்காரன் இயக்கத்தை கண்டறிய உதவும் அளவீடும் எதுவும் இல்லை. அந்த இடங்கள் அனைத்தும் குழிகளாக காட்சி அளிக்கின்றன. பழைய படாவதி பஸ்கள் அதிகாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக இயக்குவதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக டிரைவர், கண்டக்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X