இறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு: பிரியாணி மசாலா பொருட்களின் விலை கிடு... கிடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
10:04

சேலம்: அமெரிக்காவில் இருந்து, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை, மத்திய அரசு உயர்த்தியதால், பிரியாணி தயாரிப்புக்கு பயன் படுத்தப்படும், மசாலா பொருட்களின் விலை, 10 முதல், 20 சதவீதம் உயர்ந்துள்ளது.


அமெரிக்காவில் இருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும், 33 வகையான பொருட்களுக்கான வரியை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன் எதிரொலியாக கடந்த மாதம் பாதாம் பருப்பின் விலையும் உயர்ந்தது. பிரியாணி தயாரிப்புக்கு பயன் படுத்தப்படும் அன்னாச்சி பூ, பட்டை, கசகசா மற்றும் பாதாம், பிஸ்தா ஆகியவற்றின் விலை, 10 முதல், 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அன்னாச்சி பூ, முதல் ரகம் கிலோ, 680 ரூபாய்க்கு விற்றது, 800 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 580 ரூபாய்க்கு விற்றது, 700 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 490 ரூபாய்க்கு விற்றது, 590 ரூபாயாக உயர்ந்துள்ளது. பட்டை முதல் ரகம் கிலோ, 360 ரூபாய்க்கு விற்றது, 400 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 300 ரூபாய்க்கு விற்றது, 340 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 280 ரூபாய்க்கு விற்றது, 310 ரூபாய்க்கு விற்கிறது. கசகசா முதல் ரகம் கிலோ, 880 ரூபாய்க்கு விற்றது, 960 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 800 ரூபாய்க்கு விற்றது. 880 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 750 ரூபாய்க்கு விற்றது, 820 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. பாதாம் பருப்பு, முதல் ரகம் கிலோ, 900 ரூபாய்க்கு விற்றது, 950 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 850 ரூபாய்க்கு விற்றது, 900 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 750 ரூபாய்க்கு விற்றது, 800 ரூபாயாக உயர்ந்துள்ளது. பிஸ்தா முதல் ரகம் கிலோ, 2,100 ரூபாய்க்கு விற்றது, 2,200 ரூபாயகவும், இரண்டாம் ரகம், 1,900 ரூபாய்க்கு விற்றது, 2,000 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 1,750 ரூபாய்க்கு விற்றது, 1,850 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் பிரியாணி தயாரிப்புக்கான பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டு இருப்பது, அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X