| போக்குவரத்து நெரிசலால் சிக்கல்: கண்டுகொள்ளாததால் அதிருப்தி Dinamalar
போக்குவரத்து நெரிசலால் சிக்கல்: கண்டுகொள்ளாததால் அதிருப்தி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
22:45

வால்பாறை:வால்பாறையில், ரோடு குறுகலாக உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டோரத்தின் இருபக்கமும் போக்குவரத்து விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால், மக்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.


இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கடந்த மாதம் வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் அனைத்துக்கட்சியினர் மற்றும் வியாபாரிகள் கூட்டம் நடந்தது.ரோட்டோர ஆக்கிரமிப்பு, நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து நெரிசல் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவது தடுக்கப்படும் என்று, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஆனால், இன்று வரை ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள கடைகளும் அகற்றப்படவில்லை. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.


நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும். வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புக்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்தாலே வால்பாறை நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றலாம். 'பார்க்கிங்' அமைக்க நகராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X