| பாதுகாப்பு இல்லாத மருத்துவமனை Dinamalar
பாதுகாப்பு இல்லாத மருத்துவமனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
23:30

கிள்ளை : கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி, மதில் சுவர் இல்லாததால், கால்நடைகள் வந்து ஓய்வு எடுப்பதால், சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டிற்கு செல்லும் சாலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட நோயாளிகள், தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கி, 12 ஆண்டுகளுக்கு மேல் நிறைவடைந்தும், மதில் சுவர் இல்லாததால், கால்நடைகள் ஓய்வு எடுக்கும் இடமாக உள்ளது.இதனால், சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகங்களில், வைக்கப்படும் மரக்கன்றுகளை, கால்நடைகள் மேய்ந்து விடுகிறது. நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி மதில் சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X