| பயன்பாட்டிற்கு வராத ஊராட்சி சேவை மைய கட்டடம் Dinamalar
பயன்பாட்டிற்கு வராத ஊராட்சி சேவை மைய கட்டடம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
23:34

திட்டக்குடி : தச்சூர் ஊராட்சியில் செயல்படாமல் பூட்டி கிடக்கும் ஊராட்சி சேவை மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்களூர் ஒன்றியம், தச்சூர் ஊராட்சியில் கடந்த 2013--14ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 13.12லட்ச ரூபாய் மதிப்பில் ஊராட்சி சேவைமைய கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடித்து ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், பயன்பாட்டிற்கு வராததால் பலனின்றி பாழாகிறது.இதனால் பொதுமக்கள் சான்று விண்ணப்பிக்கவும், பெறுவதற்கும் ராமநத்தம் அல்லது திட்டக்குடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி சேவை மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X