| விழிப்புணர்வு ஊர்வலம் Dinamalar
விழிப்புணர்வு ஊர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
23:42

வேப்பூர் : வேப்பூர் அடுத்த திருப்பயர் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.பள்ளி முதல்வர் ரேவதி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.வேப்பூர் கூட்டுரோட்டில் துவங்கிய ஊர்வலம் திருச்சி மார்க்க சர்வீஸ் சாலை, போலீஸ் நிலையம், சிறுநெசலுார் பாலம், சென்னை மார்க்க சர்வீஸ் சாலையில் பஸ் நிலையம் வழியாக சென்று, தாலுகா அலுவலகம் அருகே நிறைவடைந்தது.இதில், மாணவர்கள் ஹெல்மெட் அணிந்தும், பதாதைகளை ஏந்தியும், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தல், ஹெல்மெட்டின் அவசியம் குறித்து கோஷங்களை எழுப்பினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X