| அரசு போக்குவரத்துக் கழக மாநில மாநாடு Dinamalar
அரசு போக்குவரத்துக் கழக மாநில மாநாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
23:43

கடலுார் : கடலுாரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க வாயிற் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன 14வது மாநில மாநாடு, வரும் 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை திருநெல்வேலியில் நடக்கிறது.இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில், கடலுார் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் எதிரில் வாயிற் கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் ஜான் விக்டர் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் மணிவண்ணன் வரவேற்றார். சம்மேளன மாநில துணைத் தலைவர் பாஸ்கரன், சி.ஐ.டி.யூ., மாவட்டத் தலைவர் பழனிவேல், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பால்கி, எழிலரசன், பெரியசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கூட்டத்தில், விபத்தை குறைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.போக்குவரத்து தொழிலாளர்களின் 9 ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X