விதி மீறி விளம்பர பலகை வைத்தால் இனி ஜெயில்தான்! இருப்பதை அகற்றவும் கலெக்டர் உத்தரவு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
01:50

கோவை:'நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு விதிகளை மீறி, விளம்பர பலகை, டிஜிட்டல் பேனர் அமைத்தால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என்று, கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்களை சாலையோரங்களிலும், கட்டடங்களின் மீதும், சாலை டிவைடர்களிலும், பாலங்களிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் வைப்பதால், வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.


இதனால், விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.எனவே, இந்த இடங்களில் விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றி, அரசும் விதிமுறைகளை வகுத்துள்ளது. எனினும், கோவை மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பது குறைந்தபாடில்லை.அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன், விளம்பர பலகை வைக்கப்படுவது தொடர்கிறது. கோவை மாநகரில், முக்கிய சாலைகளிலும், கட்டடங்களின் மேல் தளத்திலும், விளம்பர பலகைகள் இருப்பதை பார்த்த கலெக்டர் ராஜாமணி, அவற்றை அகற்ற உத்தரவிட்டார்.அதன்படி மாநகராட்சி அதிகாரிகள், அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


டிஜிட்டல் பேனர், விளம்பர பலகைகள் வைப்பவர்களை கடுமையாக எச்சரிக்கும் வகையில், கலெக்டர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.அதன் விவரம்:நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு விதிமுறைகளுக்கு முரணாக, கோவை மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைக்க வகுக்கப்பட்டுள்ள விதிகளை மீறுபவர்களுக்கும், இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தடுப்பவர்களுக்கும், ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும், தண்டனையாக விதிக்கப்படும்.



விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் எங்காவது நிறுவப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக அவற்றை அகற்ற, நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய செலவுத்தொகை, சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து வசூலிக்கப்படும். சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.நெடுஞ்சாலைத்துறை, போலீஸ், கிராம ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சிகள், மாநகராட்சி நிர்வாகத்தினர், தனிக்கவனம் செலுத்தி, உடனடியாக அனுமதியில்லாத விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் எங்காவது நிறுவப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக அவற்றை அகற்ற, நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய செலவுத்தொகை, சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து வசூலிக்கப்படும். சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.-ராஜாமணி, கோவை கலெக்டர்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X