உங்க வீட்டுல மழை நீர் சேகரிக்கிறீங்களா? இல்லேன்னா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
02:02

கோவை:கோவை மாநகர பகுதியில் உள்ள கட்டடங்களில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய, வார்டுக்கு ஒன்று வீதம், 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மழை பெய்யும்போது கிடைக்கும் நீரை வீணாக்காமல் ஏரி, குளம், குட்டைகளில் சேமித்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். பருவ மழை தவறும்போது, மாற்று ஏற்பாடாக நிலத்தடி நீரை பயன்படுத்தலாம்.


கடந்தாண்டு பெய்த மழை நீரை, குளம், குட்டைகளில் தேக்கியதன் பலனாக, கோவையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.குளம், குட்டைகளில் தண்ணீர் தேக்கினால் மட்டும் போதாது; வீடு, கடைகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என, எத்தகைய கட்டடமாக இருந்தாலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டுமென, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, கட்டட வரைபட அனுமதி வழங்கப்படும் என நகரமைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கட்டியுள்ள கட்டடங்களில், அத்தகைய கட்டமைப்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய, வார்டுக்கு ஒரு குழு வீதம், கோவை மாநகராட்சியில், 100 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வார்டு வாரியாக அனைத்து கட்டடங்களுக்கும் சென்று, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா என பார்வையிட வேண்டும். கட்டமைப்பு இல்லா விட்டால், மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பி, உடனடியாக ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது; துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.கமிஷனர் ஷ்ரவன் குமார் பேசுகையில், ''வீடுகள், அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள், தனியார் நிறுவன கட்டடங்களில் ஆய்வு செய்ய வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாவிட்டால், நோட்டீஸ் வழங்க வேண்டும்.


புதிதாக கட்டிய கட்டடங்களில் கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, வரி விதிக்க வேண்டும். வார்டுக்கு ஒரு குழு, ஐந்து வார்டுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்,'' என்றார்நகர பொறியாளர் லட்சுமணன், உதவி கமிஷனர் செந்தில் அரசன், நிர்வாக பொறியாளர்கள் சரவணக்குமார், ஞானவேல், பார்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, கட்டட வரைபட அனுமதி வழங்கப்படும் என நகரமைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கட்டியுள்ள கட்டடங்களில் அத்தகைய கட்டமைப்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய, வார்டுக்கு ஒரு குழு வீதம், கோவை மாநகராட்சியில், 100 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
17-ஜூலை-201917:59:33 IST Report Abuse
Ram ஒரு சதுர அடியைக் கூட வீணாக்காமல் கட்டடம் கட்டியாச்சு! பிறகு எங்கு மழை நீரை இறக்குவது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X