| காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் Dinamalar
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
02:04

கோவை:கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத்தில், தமிழ்த்துறை சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா, கல்லுாரி திருமந்திரம் அரங்கில் கொண்டாடப்பட்டது.தமிழ்த்துறை தலைவர் தமிழரசி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், சிபி ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் அரங்ககோபால், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அரசியலில் அவர் பின்பற்றிய அறம், கல்வித்தொண்டு, மதிய உணவுத்திட்டம், ஏழை மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வி கலைக்கழக பதிவாளர் சுந்தரராஜன், வாழ்த்துரை வழங்கினார். கலைஅறிவியல் மற்றும் மானுடவியல் புலமுதன்மையர் பழனிசாமி மற்றும் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X