எதிர்பார்ப்பு! ஊராட்சிகளில் ஒன்றிய பொறியாளர்கள் மூலம் பிளான் அப்ரூவல்... கட்டட விபத்துக்களை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
03:04

மதுரை : கிராம ஊராட்சிகளில் கட்டட விபத்துக்களை தவிர்க்க ஒன்றிய பொறியாளர்கள் மூலம் ஒன்றிய அதிகாரிகள் பிளான் அப்ரூவலை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மாநிலத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. சமீபத்தில் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் செக்கானுாரணியில் சில வாரங்களுக்கு முன் மாதவன் என்பவரின் இரண்டு மாடி வீடு இடிந்ததில் 4 பேர் பலியாயினர்.

கலெக்டர் ராஜசேகர் உத்தரவின்படி ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை கட்டட வரைபடம் குறித்து ஆய்வு செய்தார்.



அப்போது ஊராட்சி எழுத்தர் காசிமாயன் ஒன்றிய பி.டி.ஓ., போல போலியாக கையெழுத்திட்டு பிளான் அப்ரூவல் வழங்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பொறியாளர்கள் மூலம் வீடு மற்றும் கட்டுமானங்களுக்கு பிளான் அப்ரூவல் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் நேரில் ஆய்வு செய்வர். ஆனால் கிராம ஊராட்சிகளில் பிளான் அப்ரூவல் ஊராட்சிகள் மூலம் ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அங்கு பி.டி.ஓ., அனுமதியளிப்பார்.



இவர்கள் கட்டுமான தொழில்நுட்பம் குறித்த அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதை பயன்படுத்தி ஊராட்சி செயலர்கள், எழுத்தர்கள் பி.டி.ஓ.,க்கள் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் பிளான் அப்ரூவல் வழங்கும் நிலையுள்ளது. பணம் செலவாவதை தவிர்க்க வீடு கட்டுவோரும் ஒன்றிய அலுவலகத்திற்கு பிளான் அப்ரூவல்களை அனுப்புவதில்லை. இது விபத்து நடக்க காரணமாகின்றன. ஊராட்சி ஒன்றியங்களில் உதவி பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள் அரசு கட்டடங்கள், ரோடு போன்ற பணிகளை கண்காணிக்கின்றனர்.



அவர்கள் மூலம் ஊராட்சிகளில் நடக்கும் கட்டுமானங்களுக்கு பிளான்அப்ரூவல் வழங்கினால் அசம்பாவிதத்தை தவிர்க்க முடியும். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போல ஒன்றியங்களிலும் பொறியாளர்கள் மூலம் பிளான் அப்ரூவல் வழங்கலாம். இதுகுறித்து துறை இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X