| மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி Dinamalar
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
22:58

மந்தாரக்குப்பம்:கெங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.


கெங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி அர்-ரக்மத் பள்ளியில் இருந்து துவங்கியது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஈரா ஜாஸ்மின் தலைமை தாங்கினார். பேரணியை பள்ளி தாளாளர் நாசூருல்லா துவக்கி வைத்தார். பேரணி கடைவீதி, வியாபாரிகள் வீதி, கணபதி நகர், பாலாஜி நகர், எஸ்.பி.டி.எஸ்., நகர் பகுதிகள் வழியாக சென்றது.பள்ளி மாணவர்கள் பதாதைகள் ஏந்தி, கோஷம் எழுப்பியும் மழைநீர் சேகரிப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் முகமது பாரூக், கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X