| வாகனம் மோதி வாலிபர் பலி Dinamalar
வாகனம் மோதி வாலிபர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
23:01

சிதம்பரம்:சிதம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடைபயிற்சி மேற்கொண்ட வாலிபர் இறந்தார்.


சிதம்பரம் அடுத்த அம்மாப்பேட்டை தெற்கு அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜி மகன் நடராஜன், 35; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சிதம்பரம் - சீர்காழி சாலையில் நடைப் பயிற்சி மேற்கொண்டார்.கன்னி வாய்க்கால் அருகில் செல்லும் போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடராஜன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார்.விபத்து குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து, நடராஜன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X