| வண்டல் மண்ணை வணிகத்திற்கு பயன்படுத்தினால் நடவடிக்கை Dinamalar
வண்டல் மண்ணை வணிகத்திற்கு பயன்படுத்தினால் நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
23:17

கடலுார்:நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி சீட்டினை வணிக நோக்கத்தோடு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.


அவரது செய்திக்குறிப்பு;கடலுார் மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் ஏரி மற்றும் குளங்கள் நீரின்றி வறண்டுள்ளன. இதனை பயன்படுத்தி விளை நிலங்களின் மண் வளத்தினை பெருக்க வண்டல் மண் நிரப்பி மேம்படுத்தவும், நீர் நிலைகளை துார் வாரி கொள்ளளவை அதிகரிக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, நீர் நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை அப்புறப்படுத்தி விவசாயம் மற்றும் மண் பாண்டத்தொழிலுக்கு பயன்படுத்தும் நோக்கில் கடந்த 1959ல் தமிழ்நாடு சிறு வணிக சலுகை விதி 12ல் திருத்தம் செய்து, தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இதனை செயல்படுத்தும் நோக்கில் கடலுார் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை பேரூராட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள 792 ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளை துார் வாரி, அதில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டினை வணிக நோக்கத்தோடு வெளி ஆட்களுக்கு வழங்குவதற்காக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வருகின்றன.எனவே விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டினை விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக நோக்கத்தோடு பயன்படுத்தினால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்து, விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X