| பள்ளி பஸ்சும் லாரியும் மோதல் மாணவர்கள் இருவர் காயம் Dinamalar
பள்ளி பஸ்சும் லாரியும் மோதல் மாணவர்கள் இருவர் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
00:43

உடுமலை : உடுமலை அருகே, தனியார் பள்ளி பஸ்சும், லாரியும் மோதிய விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



உடுமலை அருகே, பெதப்பம்பட்டியில், என்.வி., மெட்ரிக்., பள்ளி உள்ளது. நேற்று காலை, பள்ளியின் பஸ், குடிமங்கலம் சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு, மாநில நெடுஞ்சாலையில் பெதப்பம்பட்டியை நோக்கி வந்துள்ளது.கொங்குரார் மில்ஸ் ருத்தரப்பநகர் அருகே, பஸ் வரும் போது, கேரளாவிலிருந்து தாராபுரத்தை நோக்கிச்சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பள்ளி பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியதுடன், உள்ளே அமர்ந்திருந்த மாணவர்களும், நிலைதடுமாறி விழுந்துள்ளனர்.



பள்ளி பஸ் விபத்துக்குள்ளானதால், அப்பகுதி மக்கள் பதட்டத்துடன் அப்பகுதியில் திரண்டனர். இவ்விபத்தில், பஸ்சில் பயணித்த இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், மாணவர்களை உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு, வந்து போக்குவரத்தை சீராக்கினர்.பள்ளி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளான சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X