நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரமடையாத பருவமழை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
00:48

உடுமலை : நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்யாததால், அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து, பாசனப்பகுதியில், நெல் சாகுபடி பணிகள் கைவிடப்பட்டுள்ளது.



உடுமலை அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டத்துக்குட்பட்ட, 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில், அணைக்கு கிடைக்கும் நீர் வரத்து அடிப்படையில், பழைய ஆயக்கட்டு பாசனத்தில், மூன்று போக நெல் சாகுபடி நடந்து வந்தது. நீர் பிடிப்பு பகுதியில் ஏமாற்றம்கடந்த சில ஆண்டுகளாக நிலையில்லாத நீர்வரத்து காரணமாக, இரு போக நெல் சாகுபடி மட்டுமே நடக்கிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, நடப்பாண்டு, ஜூன் மாதம் துவங்க வேண்டிய பாசன சீசன் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால், இன்னமும் துவங்காமல் உள்ளது.




அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலையில் கேரளா மாநிலம் மறையூர் சுற்றுப்பகுதியில், 838 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழைக்காலத்தில், அங்குள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சின்னாறு, பாம்பாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் மழை நீர் சேரும். இந்த மூன்று ஆறுகள் மூலமாக அமராவதி அணைக்கு நீர் வரத்து கிடைக்கும்.நடப்பாண்டு, மறையூர் சுற்றுப்பகுதியிலும், தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்கி தீவிரமடையவில்லை.




இதனால், அமராவதி அணைக்கு, இந்த சீசனில், நீர்வரத்து அதிகப்பட்சமாக வினாடிக்கு, 100 கன அடி மட்டுமே கிடைத்தது.கடந்த சில நாட்களாக வரத்து, வினாடிக்கு, 50 அடிக்கும் குறைவாகவே உள்ளது. அணையின் நீர்மட்டம், 90 அடிக்கு, 34.94 அடி மட்டுமே இருப்பதால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.இதனால், பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதியில், நெல் சாகுபடிக்கான பணிகள் எதுவும் துவக்கப்படாமல், விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பருவமழை பெய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X