| 'லேப்-டாப்' கேட்டு மாணவர்கள் மறியல் Dinamalar
'லேப்-டாப்' கேட்டு மாணவர்கள் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
00:53

மடத்துக்குளம், : மடத்துக்குளத்தில், உடனடியாக 'லேப்- டாப்' வழங்க வலியுறுத்தி, மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதித்தது.மடத்துக்குளம் தாலுகா பகுதியிலுள்ள பள்ளியில், 2017 -18, 2018 -19ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு 'லேப்-டாப்' வழங்கப்படவில்லை.




இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் படித்து வரும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 'லேப்-டாப்' வழங்கப்படுகிறது.இதனால், அதிருப்தியடைந்த, கடந்த ஆண்டுகளில் படித்த மாணவர்கள் நேற்று, காலை, 10:00 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன. போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டும் பலனின்றி மறியல் நடந்தது.



அங்கு வந்த உடுமலை மாவட்டக்கல்வி அலுவலர் மணிவண்ணன் மாணவர்களிடம், அரசு உத்தரவை காண்பித்து, விரைவில் உங்களுக்கும் வழங்கப்படும் என, தெரிவித்த பின்பும், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.ஒரு மணி நேரத்துக்குப்பின், மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற, அதிகாரிகள், 15 நாட்களில் 'லேப்-டாப்' வழங்கப்படும் என, உறுதி வழங்கினர். இதற்குப்பின், மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X