| ரசாயன ஆலையில் வாயு கசிவு Dinamalar
ரசாயன ஆலையில் வாயு கசிவு
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

18 ஜூலை
2019
07:44
பதிவு செய்த நாள்
ஜூலை 18,2019 01:28

மேட்டூர்: சேலம், மேட்டூரில், புதிய ஆலையின் சோதனை ஓட்டத்தின் போது, ரசாயன வாயு பரவி, உடல்நிலை பாதிக்கப்பட்ட மக்கள், ஆலையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.சேலம் மாவட்டம், மேட்டூர், ராமன்நகர் அருகே, கெம்பிளாஸ்ட், மூன்றாவது அலகு வளாகத்தில், 'ஹைட்ரஜன் பெராக்சைடு' உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. இது, மருந்து, மாத்திரை, பற்பசை உட்பட, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படும். இந்த ஆலையின் சோதனை ஓட்டம், சில வாரங்களாக நடக்கிறது.நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, சோதனை ஓட்டத்தின் போது, அழுகிய பழங்களில் இருந்து வீசும் துர்நாற்றத்தை போன்று, ஒரு வாயு, சுற்றுப்பகுதியில் பரவியுள்ளது. இதனால், மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஜலதோஷம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.ஆலை அருகே வசிக்கும், 200க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று பகல், 11:30 மணிக்கு, ஆலையை முற்று கையிட்டு, உற்பத்தியை நிறுத்த வலியுறுத்தினர்.மேட்டூர் தாசில்தார் அசின்பானு, கருமலைக்கூடல் போலீசார் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, சமாதானப்படுத்தி அனுப்பினர். பின், ஆலை நிர்வாகம், தற்காலிகமாக, சோதனை ஓட்டத்தை, படிப்படியாக நிறுத்தியது.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X