அப்பாடா! 329 தணிக்கை தடைகளுக்கு பாரதியார் பல்கலையில் தீர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
23:06

கோவை:பாரதியார் பல்கலையில் கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த, 329 தணிக்கை தடைகளுக்கு, கடந்த ஓராண்டில் தீர்வு காணப்பட்டுள்ளது.பல்கலைகளின் வரவு செலவு கணக்குகள், ஆண்டுதோறும் தமிழக அரசின் தணிக்கை குழுவால் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வுகளில் தடை விதிக்கப்படும் செலவினங்கள் சரி செய்யப்பட்டு, அடுத்த கல்வியாண்டு வரவு செலவு கணக்குடன், சமர்ப்பிக்க வேண்டும் என்பது வரையறை.


பாரதியார் பல்கலையின் கீழ் 2017 வரை, 1,113 தணிக்கை தடைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்தன.இதன் மொத்த மதிப்பு, 99 கோடியே 22 லட்சம் ரூபாய்.இந்நிலையில், கடந்த, ஜூன் 20ம் தேதி நிலவரப்படி, 445 தணிக்கை தடைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு, 53 கோடியே 89 லட்சம் ரூபாய் எனவும், பல்கலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்பு குழுவின் முயற்சியால், கடந்த ஓராண்டில் மட்டும், 329 தடைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, 45 கோடியே 32 ரூபாய் மதிப்பில், 668 தடைகள் நிலுவையில் உள்ளன. இதில், பெரும்பாலும் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பானவை என்று கூறப்படுகிறது. இதற்கு விரைவில் உரிய தீர்வு காண வேண்டியது அவசியம்.'தணிக்கை தடைக்கு விரைவில் தீர்வு'பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசிடம் கேட்டபோது, ''தணிக்கை தடை அதிகளவில் இருந்ததால், அப்பணிகளை கவனிக்க, ஓய்வு பெற்ற ஆடிட்டர் ஒருவரை நியமித்து, தனி கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இதற்கான ஆய்வு பணிகள் நடத்தப்பட்டன. கடந்த ஓராண்டில் அதிக தடைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ளவற்றுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
20-ஜூலை-201916:59:32 IST Report Abuse
Raj பாரதியார் பெயரை கெடுப்பதற்காக இப்படி ஒரு பல்கலைக்கழகம். அந்த பேரம் பேசிய துணை வேந்தர் கணபதி என்ன ஆனார் ? அவருடைய லீலைகளில் மகிழ்ந்து அவருக்கு பணி நீக்கம் கூட அறிவிக்காமல் வேறு ஒருவரையும் பதவிக்கு வர விடாமல் தூங்கும் ஒரு நிர்வாகம். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மாந்தரை நினைந்து விட்டால். பாரதியார் உச்சி மீது வானிடிந்து வாழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே பாரதியார் ஆனால் ஊழல் கணபதி அச்சமில்லாமல் ரொம்ப சௌகரியமாக வாழ்கிறார். இன்னும் கண்டறியப்படாத ஊழல் வாதிகள் எவ்வளவோ ? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். கல்விக்கு வந்த கேடு. இந்த பல்கலையில் பட்டம் வாங்கிய பலருக்கும் ஒரு கேட்ட பெயர், எவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்ட பட்டம் என்று கேள்வி வேறு எழுகிறது. அருகிலிருக்கும் மருதமலை முருகன் காத்தருள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X