| ராமநாதபுரம் கொத்தனார் மனைவி மகளுடன் தேனிக்கு கடத்தல் Dinamalar
ராமநாதபுரம் கொத்தனார் மனைவி மகளுடன் தேனிக்கு கடத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
23:26

ராமநாதபுரம் : கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கொத்தனார் அவரது மனைவி, மகளை கடத்தி சிறை வைத்ததாக ஓய்வு பெற்ற வனவர் மற்றும் அவரது பேரனை போலீசார் கைது செய்தனர்.



ராமநாதபுரம் முதுனாள் சாலைப்பகுதி பெருய கருப்ப நகரை சேர்ந்தவர் சண்முகவேல் 45. கொத்தனாரான இவரிடம் தேனி மாவட்டம் அடைக்கம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற வனவர் ஜெயபாலன் 63, பணம் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்தார். சண்முகவேல் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகியோரிடம் பல லட்சம் கொடுத்து வட்டிக்கு விட்டு தனக்கு மாதந்தோறும் வட்டி பணத்தை தருமாறு ஜெயபாலன் கூறியிருந்தார். அதன்படி 2016ல் ஜெயபாலன் 5.80 லட்சம் ரூபாயை சண்முகவேலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.




பணத்துக்கான வட்டியை ஓராண்டு மட்டும் சரியாக ஜெயபாலனிடம் கொடுத்த சண்முகவேல் அதன்பிறகு கொடுக்கவில்லை. இதனால் தன் பணத்தை தருமாறு சண்முகவேலிடம் அடிக்கடி ஜெயபாலன் கேட்டுள்ளார். இந்நிலையில் ஜூலை 16 இரவு சண்முகவேல் வீட்டுக்கு காரில் வந்த 6 பேர் கும்பல் சண்முகவேல் அவரது மனைவி பாண்டியம்மாள், பொறியியல் மாணவியான மகள் கமலி 21, ஆகியோரை தேனிக்கு கடத்தி சென்றனர். அங்குள்ள கோழிப்பண்ணையில் வைத்து தனக்குரிய பணத்தை தருமாறு ஜெயபாலன் தரப்பு தாக்கியதால், தன்னை விடுவித்தால் மட்டுமே பணத்தை தரமுடியும் என சண்முகவேல் தெரிவித்துள்ளார்.




இந்நிலையில், தனது குடும்பத்தை ஜெயபாலன் கடத்தியதாக எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனாவிடம் சண்முகவேலின் மூத்த மகள் பிரதிபா புகார் அளித்தார். அதனடிப்படையில் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபால் விசாரணை மேற்கொண்டு சண்முகவேல் மற்றும் மனைவி மகளை மீட்டு ராமநாதபுரம் கொண்டு வந்தார். இந்த வழக்கில் தேனி அடைக்கம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற வனவர் ஜெயபாலன், அவரது பேரன் விக்னேஷ் 23, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X