| வேளாண் முதல் கட்ட கலந்தாய்வு முடிவு: 2,995 மாணவர்களுக்கு கல்லூரி, துறை ஒதுக்கீடு Dinamalar
வேளாண் முதல் கட்ட கலந்தாய்வு முடிவு: 2,995 மாணவர்களுக்கு கல்லூரி, துறை ஒதுக்கீடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
23:35

கோவை:வேளாண் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவு நேற்று வெளியானது. அதன்படி, 2,995 மாணவர்களுக்கு, அவரவர் விருப்பம் தெரிவித்த கல்லுாரி மற்றும் துறை ஒதுக்கீடு செய்து, தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக, டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.


இப்பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள, உறுப்பு, இணைப்பு கல்லுாரிகளில் முதலாமாண்டில், 3,905 மாணவர்களுக்கான இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு கடந்த, 12 முதல் 15ம் தேதி வரை நடந்தது.இதில், கல்லுாரி மற்றும் துறையை மாணவர்கள் தேர்வு செய்து, 'ஆன்லைன்' மூலம் சமர்ப்பித்திருந்தனர்; இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.அதன்படி, 2,995 மாணவர்கள் தேர்வு செய்த கல்லுாரி, துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் நேற்று தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது:முதல்கட்ட கலந்தாய்வுக்கு, 12 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதில், 6,000 பேர் பங்கேற்றனர். இதில், விதிமுறைப்படி உரிய தகுதியிருந்த, 2,995 பேருக்கு கல்லுாரி மற்றும் துறையை உறுதிசெய்து தகவல் அனுப்பியுள்ளோம்.


இம்மாணவர்கள், 23, 24, 25 ஆகிய தேதிகளில், அவரவருக்கு ஒதுக்கிய நேரத்தில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள, அண்ணா அரங்கிற்கு நேரடியாக உரிய சான்றிதழ்களுடன் வரவேண்டும்.இத்துடன், 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்திய, வங்கி சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காமல், உரிய கட்டணம் செலுத்தாமல் இருக்கும் மாணவர்களின் இடம் காலியிடமாக அறிவிக்கப்பட்டு, 'ஸ்லைடிங் சிஸ்டம்' முறையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X