| பெண்களுக்கு பிரதிநிதித்துவம் செனட் கூட்டத்தில் தீர்மானம் Dinamalar
பெண்களுக்கு பிரதிநிதித்துவம் செனட் கூட்டத்தில் தீர்மானம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
23:36

கோவை:பாரதியார் பல்கலையில் நேற்று செனட் கூட்டம் நடந்தது. சிண்டிகேட் குழுவில் தனியார், அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும், பெண்களுக்கும் தனி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நேற்று நடந்த இக்கூட்டத்தில், துணைவேந்தர் தேடல் குழுவுக்கு, அரசு தரப்பு நாமினியை விரைந்து நியமிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும், பிரிவு 'பி' பி.எச்டி., முறைகேடுகளை களைய வேண்டும், பல்கலை மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது, 65 ஆக உயர்த்த வேண்டும், சிண்டிகேட் குழுவில் தனியார், அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும், பெண்களுக்கும் தனி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பாரதியார் பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஜெயக்குமார் கூறுகையில், ''பல்கலை நிர்வாக ரீதியான செயல்பாடுகள் குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து செனட் உறுப்பினர்களின் கோரிக்கையின் படி, துணைவேந்தர் தேடல் குழுவில் அரசு நாமினியை, விரைவில் நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X