| இழப்பீடு வழங்க ஆவினுக்கு உத்தரவு Dinamalar
இழப்பீடு வழங்க ஆவினுக்கு உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
23:39

கோவை:கோவை, கஸ்துாரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்த அன்பழகன், 2014, ஜன., 21ல், ஆவின் பூத்தில், 427 ரூபாய் செலுத்தி, மாதந்திர பால் அட்டை வாங்கினார். வீட்டு அருகிலுள்ள ஆவின் பூத்தில், அட்டையை காட்டி பால் கேட்ட போது கொடுக்க மறுத்தனர். அன்பழகன், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், 'ஆவின் பால் பூத் நடத்தியவர் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டதால், மனுதாரருக்கு, 5,000 ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு, 3,000 ரூபாய், பால் அட்டை வாங்கிய 427 ரூபாய் வழங்க, ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X