| மாணவியர் மறியல் Dinamalar
மாணவியர் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
23:49

உடுமலை:மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசால், இலவச 'லேப்-டாப்' வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2017-18, 2018-19 ஆகிய இரு ஆண்டுகள் படித்த மாணவர்களுக்கு 'லேப்-டாப்' வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்தாண்டு படிக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்-டாப் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அதிருப்தியடைந்த மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று காலை, தேவனுார் புதுார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவியர், 'லேப்-டாப்' கேட்டு, ரோடு மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி.,ஜெயச்சந்திரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி மறியலை கைவிடச்செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X