காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
23:59

காரைக்குடி : தமிழகத்தில் முதன் முறையாக ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு துாய்மை மற்றும் மாணவர்களின் கல்வித்திறன் உயர்வுக்காக ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.




காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி 2013ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2014--15 ல் 318, 2015--16ல் 478, 2016- -17ல் 650, 2017- -18ல் 954, 2018- -19ல் 1192, 2019 -- 20ல் தமிழ் வழி கல்வியில் 293 பேர் ஆங்கில வழி கல்வியில் 1032 பேர் என 1325 பேர் இங்கு கல்வி பயில்கின்றனர்.கடந்தாண்டு மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டம் மூலம் பள்ளி துாய்மையாக செயல்பட்டதால் மாநில அரசு இப்பள்ளிக்கு துாய்மை பள்ளி விருது வழங்கியது. ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழுக்கு பள்ளியின் சார்பில் கடந்த பிப்ரவரியில் மனு செய்யப்பட்டது.




பிப்.2019 இறுதியில் 3 பேர் கொண்ட குழு பள்ளி வளாகத்தில் துாய்மை, மாணவர்களின் கல்வி மேம்பாடு, பள்ளி அலுவலக மேலாண்மை, ஆசிரியர்களின் கல்வித்தரம், மாணவர்களின் கழிப்பறை சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தது. மீண்டும் கடந்த ஜூனில் 2 பேர் அடங்கிய குழு வருகை தந்து முந்தைய ஆய்வு விவரங்கள் மற்றும் தற்போதைய கல்வித்தர உயர்வு, பள்ளியின் செயல்பாடு, தொடர் துாய்மை, மாணவர்களின் ஒழுக்கம், பெற்றோர்களின் ஒத்துழைப்பு, 100 சதவீத தேர்ச்சி அடிப்படையில் நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை எந்த அரசு உயர்நிலைப்பள்ளியும் இச்சான்றை பெற்றதில்லை என தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X