| மோட்டார் இயக்குவதில் தகராறு-5 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது Dinamalar
மோட்டார் இயக்குவதில் தகராறு-5 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

20 ஜூலை
2019
18:43
பதிவு செய்த நாள்
ஜூலை 20,2019 00:04


சிவகங்கை: கீழக்கண்டனி அருகே கல்குளத்தை சேர்ந்த கருப்புச்சாமி மனைவி இந்திராணி 34. இவர் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில் அடிக்கடி மின்மோட்டாரை இயக்கி, குடிநீர் ஏற்றியுள்ளார். அடிக்கடி மோட்டாரை இயக்கினால் பழுதாகிவிடும் என கல்குளத்தை சேர்ந்த செல்லத்துரை மனைவி மாரிமுத்து கண்டித்துள்ளார். கடந்த மே 31ம் தேதி பகல் 12:30 மணிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. மாரிமுத்துவிற்கு ஆதரவாக அவரது கணவர் செல்லத்துரை 40, உறவினர் மூக்கன் மகன் மணிகண்டன், சூரம்மா, செல்லத்துரை மகள் வனிதா ஆகியோர் இந்திராணியை தாக்கியுள்ளனர். சிவகங்கை எஸ்.ஐ., அன்சாரி உசேன் தகராறில் ஈடுபட்ட மாரிமுத்து உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து, செல்லத்துரையை கைது செய்தார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X