| அம்மன் கோயில்களில் 'மானாமதுரை கஞ்சி கலயங்கள்' Dinamalar
அம்மன் கோயில்களில் 'மானாமதுரை கஞ்சி கலயங்கள்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:06

மானாமதுரை : மானாமதுரையில் மண்ணால் தயாரிக்கப்படும் 'கஞ்சி கலயங்கள்'தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களுக்குவிற்பனைக்கு அனுப்பப்படுகிறது.



தற்போது ஆடி பிறப்பை ஒட்டி தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் 'கஞ்சி கலய' ஊர்வலங்கள் விமரிசையாகநடத்தப்பட்டு வருகிறது. மண்பாண்ட பொருளுக்கு பெயர் பெற்ற மானாமதுரையில்உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணால் சிறிய அளவிலான 'கஞ்சி கலயங்கள் மற்றும் தீர்த்தகலயங்கள்'ஆகியவற்றை கலை நயத்தோடு தயார் செய்து பல ஊர்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.பல்வேறு ஊர்களிலிருந்து வரும் மொத்த வியாபாரிகள் இங்கிருந்து பொருட்களை லாரிகளில் ஏற்றிசெல்கின்றனர்.



மண்பாண்ட தொழிலாளி கார்த்தி 30, கூறியதாவது: தற்போது ஆடி மாதம்ஆரம்பமானதை ஒட்டி அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி மற்றும் திருவிழாக்களை முன்னிட்டு 'கஞ்சி கலயம், தீர்த்த கலயம், கூழ் காய்ச்சி ஊற்றுதல்'போன்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கம்,இதற்காக தற்போது கலைநயத்தோடு சிறிய அளவில் கஞ்சி கலயங்களை தயார் செய்து வருகிறோம், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X