| வங்கனூர் பஸ் நிலையத்தில் பயணியர் அவதி Dinamalar
வங்கனூர் பஸ் நிலையத்தில் பயணியர் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:13

ஆர்.கே.பேட்டை : பஸ் நிலையத்தில் உள்ள நிழற்குடையை பயன் படுத்த முடியாதபடி, கட்டட இடிபாடுகளை கொட்டி வைத்துள்ளதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார் கிராமத்தில், 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 1980களில், இந்த கிராமத்திற்கு, ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.காலப்போக்கில், தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. 40 ஆண்டுகளில், மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், தற்போது, அரசு பஸ் தடம் எண்: 65 மட்டுமே இயக்கப்படுகிறது.இரண்டு மணி நேரத்திற்கு, ஒரு முறை வந்து செல்லும் இந்த பஸ்சுக்காக, பஸ் நிலையம் செயல்படுகிறது.இந்த பஸ் நிலையத்தில், உயர் கோபுர மின்விளக்கு மற்றும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பஸ்சுக்காக பயணியர் காத்திருக்கும் நிழற்குடை முன், கட்டட இடிபாடுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.இதனால், இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X