பள்ளிப்பட்டு : தண்ணீர் தேடி, ஊருக்குள் புகுந்த புள்ளி மான், கிணற்றில் தவறி விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்த, மானை மீட்டனர்.பள்ளிப்பட்டு அடுத்த, சாமந்தவாடா கிராமத்திற்கு, நேற்று அதிகாலையில், புள்ளி மான் ஒன்று வந்தது.தண்ணீர் தேடி கிணற்றின் அருகே சென்ற போது, தவறி கிணற்றில் விழுந்தது. இதை பார்த்தோர், பள்ளிப்பட்டு, தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மானை பத்திரமாக பிடித்தனர். மீட்கப்பட்ட மான், பள்ளிப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.பின், பள்ளிப்பட்டு அருகே, புல்லுார் கிழக்கு காப்புக்காட்டில் பத்திரமாகவிடுவிக்கப்பட்டது.