| அரசு பள்ளியில் மரக்கன்று நடவு Dinamalar
அரசு பள்ளியில் மரக்கன்று நடவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:17

திருத்தணி : திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,600க்கும் மேற்பட்ட மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதை தவிர்த்து, நல்ல மழை பெய்ய வேண்டியும், மரக்கன்றுகள் நடும் விழா, பள்ளி வளாகத்தில், நேற்றுமுன்தினம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை, டி.தெமினா கிரோனப் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்,ஜெயச்சந்திரன் வரவேற்றார்.இதில், பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர், எம்.சுரேஷ் பங்கேற்று, மரக்கன்றுகளைநட்டு விழாவை துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து, பள்ளி வளாகத்தில், 60க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளைநட்டனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X