| மாணவர்களிடம் விழிப்புணர்வு Dinamalar
மாணவர்களிடம் விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:22

பொன்னேரி : தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே, நேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சென்னை தொழுநோய் ஒழிப்பு துறையை சார்ந்த மருத்துவ குழுவினர், தலைமையாசிரியர் வெற்றிவேல் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், 863 மாணவர்களுக்கு, பரிசோதனை செய்யப்பட்டது.பின், மாணவர்களிடம், மருத்துவ குழுவினர் தெரிவித்ததாவது:தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். உடலில் உணர்ச்சியற்ற நிலை இருந்தால், உடனடியாக, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி, சிகிச்சை பெறலாம்.அனைத்து மருத்துவமனைகளிலும், இந்நோய்க்கு ஒரே வகையான மருந்தே பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X