போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 ஜூலை
2019
18:49
பதிவு செய்த நாள்
ஜூலை 20,2019 00:25

அம்மன் கோவிலில் திருட்டு


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, அரசூர் அருகே, தோப்புகொள்ளை கிராமத்தில், எல்லையம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கோவில் முகப்பில் உள்ள, 'கிரில் கேட்' மற்றும் கருவறை பூட்டுகளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். அம்மனுக்கு அணிவித்திருந்த, 4 கிராம் தங்க தாலியை திருடி சென்றனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.



குழந்தை இல்லாததால் தற்கொலை


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, துராபள்ளம் பஜார் பகுதியில் வசித்தவர் பாலகிருஷ்ணன் மகன் சசிகுமார், 36. நேற்று முன்தினம் இரவு, வீட்டில், துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.திருமணமாகி, ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில், தற்கொலை செய்து கொண்டார் என, அவரது மனைவி, போலீசில் புகார் அளித்தார்.



வாகனம் மோதி ஒருவர் பலி


ஊத்துக்கோட்டை: சென்னை, அய்யப்பன்தாங்கலில் வசித்தவர், துரை 63. வெங்கல் அடுத்த காரணியில் மாட்டு பண்ணை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம், தன், 'பல்சர்' இரு சக்கர வாகனத்தில், பூச்சிஅத்திப்பேடு கிராமம் அருகே சென்றார். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவர் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த அவர், போரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று, இறந்தார்.



மருந்து குடித்து பெண் பலி


ஊத்துக்கோட்டை: வெங்கல் அடுத்த, விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவேரி, 46. இவரது கணவர் பாபு, 48, வழக்கு ஒன்றில், சிறையில் இருக்கிறார். இதன் காரணமாக வேதனை அடைந்த, காவேரி, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். உயர் சிகிச்சைகாக, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இறந்தார்.



மணல் கடத்திய நால்வர் கைது


ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம் பகுதியில், பெரியபாளையம் போலீசார், வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த இரு சக்கர வாகனங்களை மடக்கினர்.விசாரணையில், ஏரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ், 24, கிரி, 25, என்பதும், வாகனத்தில் மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது. மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தார்.இதேபோல், வெங்கல் அடுத்த சித்தாதுார் ஏரியில் மணல் கடத்திய, 'பொலிரியோ டிரக்' ஓட்டுனர்கள் சரண், 19, கார்த்திக், 24, ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர்.








கடைக்காரர் மீது தாக்கு


திருத்தணி: திருத்தணி அடுத்த, பட்டாபிராமபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 46. இவர், பட்டாபிராமபுரம் பஸ் நிறுத்தம் அருகே, 'வாட்டர் சர்வீஸ்' கடை வைத்துள்ளார்.நேற்று மாலை, இவரது கடைக்கு, 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்ய சொல்லியுள்ளனர். இதில், சுந்தர்ராஜிக்கும், வாகனத்தில் வந்தோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.அவர்கள் தாக்கியதால், காயமடைந்த சுந்தர்ராஜ், திருத்தணி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுந்தர்ராஜ் புகாரின்படி, வழக்கு பதிந்த திருத்தணி போலீசார், இருவரை தேடுகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X