| வலியுறுத்தல் Dinamalar
வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:34

நத்தம் : நத்தத்தில் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட துரைக்கமலம் அரசு பள்ளியில் காலி பணியிடங்களை நிரப்புவது எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.



இதன்படி கடந்த ஓராண்டுக்கு முன்பு முதற்கட்டமாக மாவட்டம் தோறும் பின்தங்கிய ஒரு பகுதியில் தேர்வு செய்தவற்றை மாதிரி பள்ளிகளாக அறிவித்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் துரைக்கமலம் அரசு அண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதில் இருபாலருக்கும் ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்படும். நத்தம் பள்ளிக்கு வகுப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.50 லட்சம் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக வழங்கிய ரூ.30 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறை, ஒலிபெருக்கி சாதனம், கண்காணிப்பு கேமரா, கழிப்பறை, போர்வெல் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்துள்ளது.




சில தனியார் அமைப்பு மூலமும் கட்டமைப்பு பணி நடந்துள்ளது.இந்த ஆண்டு முதல் மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இதுவரை 350 க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். 11 ம் வகுப்பு 'பயோ மேத்ஸ்' பிரிவில் மட்டும் 30 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு கூடுதல் மாணவர்கள் சேர்ந்துள்ளதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், கற்பித்தலில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தற்காலிக ஆசிரியர்களை நியமித்தாலும், விருப்பம் இன்றி பணியாற்றும் சூழல் உள்ளது.




எனவே பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்வித்துறையினரிடம் கேட்டபோது, ''மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விகிதாசார அடிப்படையில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை கண்டறிந்து, பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்'' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X