புகார் பெட்டி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
புகார் பெட்டி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

20 ஜூலை
2019
18:48
பதிவு செய்த நாள்
ஜூலை 20,2019 00:37

தேங்கும் கழிவுநீர்திண்டுக்கல் மாலப்பட்டி ரோட்டில் டான்சி எதிரே வாய்க்கால் பணி 9 மாதங்களாக அரைகுறையாக நிறுத்தப்பட்டதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ரோட்டிலும் வழிகிறது. இதனால் துர்நாற்றம், சுகாதாரகேடு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. பணியை முடித்து சுகாதார கேடை களைய வேண்டும்.-பிரபாகரன், மாலப்பட்டிபன்றிகளால் சுகாதாரக்கேடுபழநி குதிரையாறு ரோடு நரிப்பாறை பகுதியில் குப்பைக் கிடங்கில் பன்றிகள் சுற்றித்திரிவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் பன்றிகளை பிடிக்க முன்வர வேண்டும்.-- மதியழகன், நரிப்பாறை.ஆக்கிரமிப்பால் நெரிசல்பழநி திருஆவினன்குடி சரவணப் பொய்கை ரோட்டின் இருபுறங்களிலும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் .உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - பாலக்குமார், பழநி.சாக்கடையில் கழிவுநீர்பழநி கவுண்டர் இட்டேரி ரோடு,- பெரியப்பாநகர் பிரிவு தரைப்பாலத்தில் சாக்கடையில் குப்பை குவிந்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. சுத்தம் செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -பீட்டர், பெரியப்பாநகர்.வேகத்தடை வேண்டும்நத்தம் கோவில்பட்டி மையப்பகுதியில் மதுரை மெயின் ரோடு செல்கிறது. இதில் கடைத்தெரு அருகே 'எஸ்' வடிவ திருப்பம் உள்ளது. இதில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைப்பது அவசியம்.-சண்முகம், கோவில்பட்டி.-----------------பயன்பாடில்லாத கழிப்பறைநத்தம் அருகே செந்துறை சந்தைப்பேட்டை பகுயில் பொதுக் கழிப்பறை பல ஆண்டுகளாக பயன்பாட்டின்றி பூட்டிக்கிடக்கிறது. இங்கு வாரச்சந்தை நாட்களில் ஏராளமான கிராம மக்கள் வருவர். அவர்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.-செல்வம், செந்துறை.அலைக்கழிப்புஆத்துார் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் வாக்காளர் அடையாள அட்டை எடுப்பதற்கு இயந்திரம் பழுது எனக்கூறி பணிசெய்ய மறுக்கின்றனர். 2 மாதங்களாக அங்கு வருவோர் அலைக்கழிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமதுரை, ஆத்துார்ரோடு குறுகியதுபழநி முல்லைநகர் ஜவஹர்நகர் 3வது ரோடு பகுதியில் குழாய் பதிக்க 5 ஆண்டுகளுக்கு முன் ரோட்டை தோண்டினர். அதன்பின் சரிசெய்யவில்லை என்பதால் பத்தடி ரோடு ஒத்தையடிப் பாதையாகிவிட்டது. அவசரத்தேவைக்கு ஆட்டோகூட வரமுடியாது. முதியோர் பலரும் சிரமப்படுகினறனர். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை தேவை.-ராணி, பழநிகுப்பையால் கேடுஆத்துார் ஒன்றியம், முன்னிலைக்கோட்டையில் என்.பஞ்சம்பட்டி ரோட்டில் உள்ள நீரோடையில், குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.--எம்.ரவீந்திரன், முன்னிலைக்கோட்டை.ரோடு அமைக்கப்படுமாஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்ட் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பாதை மண் ரோடாக இருப்பதால் மழைக் காலத்தில், சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது. இதனை தார்ரோடாக மாற்ற வேண்டும்.-முருகசாமி, ஒட்டன்சத்திரம்.சப்வேயில் மழைநீர்ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள சப்வேயில் மழைநீர் நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமமாக ஏற்படுவதுடன், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.அதிகாரிகள் நடவடிக்கை தேவை.-பகவதி, ஒட்டன்சத்திரம்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X