| காபி தொழில்நுட்ப கருத்தரங்கு Dinamalar
காபி தொழில்நுட்ப கருத்தரங்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:38

தாண்டிக்குடி : தாண்டிக்குடி காபி மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட கருத்தரங்கு நடந்தது.காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் பாபு தலைமை வகித்தார்.



தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் தமிழ் செல்வபாய் முன்னிலை வகித்தார். காபி வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் பேசினர். விஞ்ஞானிகள் மனோகரன், சவுந்தரராஜன், ராஜூபதி, சண்முகம் சுரேந்திரன் பங்கேற்றனர்.கருத்தரங்கில் புவி வெப்பமயமாதலால் பயிர் சாகுபடியில் ஏற்பட்டு மாற்றங்கள், அதனை எதிர்கொள்ளும் முறை, சந்தைப்படுத்துதல், காபி சாகுபடிக்கு ஏற்ற உரங்கள், காபியில் இலைத்துரு நோயை கட்டுப்படுத்தும் முறை, காய்த்துளைப்பானை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் சந்தேகங்களுக்கு ஆராய்ச்சி நிலையத்தை விவசாயிகள் அணுகலாம் என துணை இயக்குனர் பாபு கூறினார். உழவியல் நிபுணர் ரேவதி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X