தொடர் மழையால் சுற்றுலா வாகனங்களுக்கு தடை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:40

சின்னமனுார் : மேகமலை வனச்சரணாலயத்தில் தொடர் மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக சின்னமனுார்-ஹைவேவிஸ் ரோட்டில் சுற்றுலா வாகனங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.




மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில், மேகமலை வனஉயிரின சரணாலயம் முக்கிய இடம் வகிக்கிறது. ரம்யமான சூழல் நிலவுவதால் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இரண்டாண்டுகளுக்கு முன் சின்னமனுாரிலிருந்து ஹைவேவிஸ் வரை ரோடு அகலப்படுத்தி அமைக்கப்பட்டது. இதனால் வார இறுதியில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. அகலமான வனச்சாலையில் சில இடங்களில் மழை பெய்யும் போது நிலச்சரிவு ஏற்படுகிறது.




கடந்தாண்டு டிசம்பரில் பெய்த கனமழையில் சென்டர் கேம்ப் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் மூன்று நாட்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இப்பகுதியில் தொடர் மழை பெய்கிறது. ரோட்டோர மரங்கள் சரிந்து விழும் வாய்ப்புள்ளதால், சுற்றுலா வாகனங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.எஸ்.ஐ., தனிஷ்கொடி கூறுகையில், ''தென்பழனி வனத்துறை செக்-போஸ்ட் அருகே வாகனத்தடை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வருபவர்களிடம் நிலச்சரிவு அபாயம் குறித்து எடுத்து கூற போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மலை கிராம மக்கள் சென்று வர தடையில்லை,' என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X