| மேல்மங்கலத்தில் நெல் அறுவடை துவக்கம் Dinamalar
மேல்மங்கலத்தில் நெல் அறுவடை துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:40

தேவதானப்பட்டி : மேல்மங்கலத்தில் இரண்டாம் போக நெல் அறுவடைப்பணி துவங்கியது.பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலம், வடுகபட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, தர்மலிங்கபுரம், அழகர்நாயக்கன்பட்டி, ஆகிய கிராமங் களில் வராகநதியில் வரும் நீரை ஆதாரமாகக் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிறைவதன் மூலம் ஆண்டுதோறும் ஐந்து ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்முதல்போக நெல் சாகுபடி செய்யப்படு கிறது. தொடர்ந்து மழை இல்லாததால் வராகநதி வறண்டு கிடக்கிறது. இந்நிலையில் வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங் கலத்தில் கிணற்று நீரை ஆதாரமாக கொண்டு ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போக நெல் சாகு படி செய்யப்பட்டது. மேல்மங்கலத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதில் அறுவடைப்பணி துவங்கி யுள்ளது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X