அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா திட்டங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:43

சென்னை: தமிழக சுற்றுலாத் துறை சார்பில், ஆடி மாதத்தை முன்னிட்டு, அம்மன் கோவில்களுக்கான சுற்றுலா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஆடி மாதத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும், அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, ஆடி மாதத்திற்கான அம்மன் கோவில் சுற்றுலா, 23ம் தேதி துவங்குகிறது.108 அம்மன் கோவில் சுற்றுலா: ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, வெள்ளி மற்றும் திங்கள் இரவு, 9:00 மணிக்கு, சென்னை வந்தடையும். வைத்தீஸ்வரன் கோவில், தஞ்சை, மதுரை, திருச்சி இரவு தங்குதல்.கட்டணம்: ஒருவருக்கு, பஸ், தனி அறையுடன், 8,500 ரூபாய். இருவர் தங்கும் அறையில், ஒருவருக்கு, 6,300 ரூபாய். சிறார்களுக்கு, 5,300 ரூபாய்.ஆடி அமாவாசை ராமேஸ் வரம் சுற்றுலா: ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் சுற்றுலா, ஜூலை, 29ம் தேதி புறப்பட்டு, ராமேஸ்வரம் தரிசனம் முடித்து, ஆக., 1ம் தேதி காலை, சென்னை வந்தடையும்.கட்டணம்: ஒருவருக்கு, பஸ், தனி அறை, 4,400 ரூபாய். இருவர் தங்கும் அறையில், ஒருவருக்கு, 4,000 ரூபாய்.ஒரு நாள் சக்தி சுற்றுலா: ஒருநாள் சக்தி சுற்றுலா, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை, 6:30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 7:00 மணிக்கு சென்னை வந்தடையும்.கட்டணம்: ஒரு நபருக்கு, 725 ரூபாய்.அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலா குறித்த தகவல்களுக்கு, சென்னை, வாலாஜா சாலையில் உள்ள, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை, நேரில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், 044- 2533 3333, 2533 3444 என்ற எண்களிலும், 180042 531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், தொடர்பு கொள்ளலாம்.www.ttdconline.com என்ற இணைய தளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X