கட்டுமானம் மேற்கொள்ள கட்டட வகைப்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:44

மனைகளில் கட்டுமானம் மேற்கொள்ளதிட்ட அனுமதி விதிகளில், கட்டடங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுஉள்ளனவா?



ஆம். ஒரு மனையிடத்தில் கட்டடம் கட்டும்முன், சம்பந்தப்பட்ட திட்டக் குழுவிடம் அங்கீகாரம் பெறவேண்டும். அதற்காக 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.1)சாதாரண கட்டடங்கள் என்பவை, இரண்டு தளங்கள் கொண்ட மற்றும் அதற்குள் நான்கு குடியிருப்புகள் மட்டுமே உள்ள கட்டடங்கள். வணிக நோக்கத்திற்கான கட்டடம் எனில்அந்த மனையிடம் 300 m2 பரப்பளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.2) சிறப்புக் கட்டடங்கள் என்பவை தரைத்தளம் உட்பட இரண்டு தளங்களுக்கு மேல் கொண்ட ஆனால், நான்கு தளங்களுக்கு மிகாத ( G+3) அல்லது பேஸ்மன்ட் தளம் + 4 தளங்கள் கொண்ட மற்றும் அதற்குள் உள்ள நான்கிற்கும் அதிகமான குடியிருப்பு வீடுகளைக் கொண்ட கட்டடங்களைக் குறிக்கும்.




அக்கட்டடத்தின் மொத்த உயரம் 15 மீட்டர்களைத் தாண்டக் கூடாது. 300 m2 பரப்பளவிற்கும் கூடுதலான வணிகப் பயன்பாட்டிற்கான கட்டடங்களும் சிறப்புக் கட்டடங்கள் ஆகும்.3) மல்டி ஸ்டோரி கட்டடங்கள் என்பவை பேஸ்மன்ட் தளம் அல்லது வாகன பார்க்கிங் தளத்தைத் தவிர, நான்கு தளங்களுக்கும் அதிகமான தளங்களைக் கொண்ட மற்றும் 15 மீட்டருக்கும் கூடுதலான உயரம் கொண்ட கட்டடங்கள் ஆகும்.நான் கட்ட உத்தேசித்துள்ள ஒரு கட்டடம் கடற்கரைக்கு அருகில் உள்ளது. அதற்கான சிறப்பு விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே கட்டட வரைபட அனுமதி தரப்படும் என்கின்றனர்.




அது சரியா?சரியே. தமிழக கடலோர மாவட்டங்களில் கடற்கரையிலிருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ள இடங்களில் 'தமிழ்நாடு சைக்ளோன் ப்ரோன் ஏரியா ஸ்பெஷல் பில்டிங் ரூல்ஸ்' 1982 என்ற சட்ட விதிகளின்படி, கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும். அக்கட்டடங்களுக்கு விதிகள்படி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.-எஸ்.ஸ்ரீனிவாசராகவன், வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X